Monday, August 10, 2009

அதிர்வெண்......!

அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இது ஏர்ட்சு என்ற அலகில் அளக்கப்படுகிறது.

ஏர்ட்சு அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி-1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.
மின்காந்தவியலில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.

By worldmazz with No comments

0 comments:

Post a Comment

    • Popular
    • Categories
    • Archives